விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வசிக்காத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விடுவிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி வள அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமையல் எரிவாயுவுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி சமைக்க மக்கள் விருப்பப்படுவதால் மண்ணெண்ணெய்க்கு அதிக கிராக்கி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நாட்களில் பேருந்துகள் கூட மண்ணெண்ணெய்யில் ஓடத் தொடங்கியுள்ளன என்றார்.மக்களும் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதால் அரசாங்கம் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வரவு செலவுத் திட்ட மாதத்தில் எரிபொருள் விலையை நிர்ணயிப்பது நிதி அமைச்சரின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

