24.5 C
Colombo
Friday, October 9, 2026

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவிப்பு!

கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும்

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக தற்போது சிகிச்சைகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது.எனவே பொதுமக்கள் சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்

எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles