இழுவைமடி தொழிலிற்கு எதிராக செய்யப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்று(1) இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும்,அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அவர்களின் தலைமையிலான கலந்துரையாடல் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
இதன்போது மீனவர்கள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பாக சுப்பிரமணியம், பிரான்சிஸ், மரியராசா ஆகியோரும் தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அன்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் அருள்நாதன ஆகியோர் சந்திப்பை மேற்கொண்டனர்.

