வெளிநாடுகளில் இருந்து வரும் டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து இலங்கை இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்
பாராளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மிருசுவில் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் விடுதலை தொடர்பில் கடந்த கூட்டத் தொடரில் சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி பேசும் போதே சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 11 ஆயிரம் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து விடுவித்த சந்தர்ப்பத்தில், குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய நபர்களை விடுதலை செய்த போது எதிர்ப்பினை தெரிவிக்காத பொன்சேகா இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா சரத் வீரசேகர கூறுவதை பார்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்பதா? என்று கேள்வி எழுப்பினார்.தொடர்ச்சியாக இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

