28.9 C
Colombo
Friday, August 21, 2026

சாவகச்சேரி பிரதேச சபை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசம்

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக திருவுளச் சீட்டு மூலம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  பொன்னையா குகதாசன் தெரிவானார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று சாவகச்சேரி பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பித்தபோது கூட்டத்தை நடத்துவதற்கான கோரமின்மையால் கூட்டம் 30 நிமிடங்கள் தாமதத்திற்கு பின்னர் ஆரம்பித்தது.

தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்னையா குகதாசன் 10 வாக்குகளையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆறு பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒருவரும் வாக்களிப்பின்போது நடுநிலை வகித்தனர்.

போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகளை பெற்றதால் திருவுளச்சீட்டு மூலம் தவிசாளராக பொன்னையா குகதாசன் தெரிவானார்.

உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட இராமநாதன் யோகேஸ்வரன் தெரிவானார்.

28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 5 ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலுமொரு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினரொருவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவளிக்காமல் நடுநிலை வகித்தார். குறித்த நபர் உப தவிசாளர் தெரிவின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles