25.6 C
Colombo
Wednesday, October 14, 2026

சம்பந்தனின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரா.சம்பந்தன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சகா, நாங்கள் பல நாட்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் – என பதிவிடப்பட்டுள்ளது.

https://x.com/PresRajapaksa/status/1807482765312716867?t=r0UOyQry_Zt1WRHy3B5H8w&s=19

சம்பந்தனின் மறைவுக்கு பலரும் இரங்கல்!

சம்பந்தனின் மறைவுக்கு பலரும் இரங்கல்!

இரா.சம்பந்தன் காலமானார்!

இரா.சம்பந்தன் காலமானார்!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles