24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

அனலைதீவில் காணாமல்போன மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர்!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://x.com/JaffnaGallery/status/1800881856889655532?t=C9w2LDcF7zMWFLGMtxVRjQ&s=19

இருவரிடம் பொலிஸார் மற்றும் கரையோர காவல் படையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles