27.8 C
Colombo
Friday, August 21, 2026

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில்  போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கடையில் இருந்து 70 போதை மாத்திரைகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வியாபார நிலைய உரிமையாளரான மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles