பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வர்த்தக சமூகத்தினரை அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தித்து கலந்துரையாடினர்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் யாழில் வர்த்தகர்களுடன் சந்திப்பு!
https://t.co/noeaWC3fi9@TiranAlles @SL_PoliceMedia #jaffna #police pic.twitter.com/nRnEbtKg7U
— Jaffnagallery News (@JaffnaGallery) March 16, 2024
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் வவுனியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

