29.5 C
Colombo
Saturday, October 10, 2026

அளம்பிலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) இரவு 7 மணியளவில் குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  செம்மலையை சேர்ந்த நாகராசா யோகராசா (வயது 54) என்பவர் இன்று (02) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணொளியாக பார்க்க….

https://www.facebook.com/share/v/feFg9LNZakAaT1J7/?mibextid=oFDknk

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles