29.5 C
Colombo
Friday, October 9, 2026

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி!

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ம் திகதி
மாரடைப்பு காரணமாக சாந்தன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles