“போனகிழம ஆஸ்பத்திரிக்கு வரும்போதும் ஸ்ரைக் என்டிச்சினம். இன்டைக்கு வரும்போதும் ஸ்ரைக் என்டினம்” என சுகாதார தொழிற்சங்கங்கங்களின் பகிஷ்கரிப்பால் பெருமளவில் செயழிலந்த யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிப தாய் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
காணொளியாக பார்க்க……
https://fb.watch/qaQU_Xezhp/?mibextid=RtaFA8
நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்று வருகிறது. இதனால் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா மேலதிக(DAT) கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இன்று(13) காலை 6.30 முதல் நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும்பாலான கிளினிக்குகள் உள்ளிட்ட பல சேவைகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல வைத்தியசாலைகளில் சுகாதார சேவை நெருக்கடிக்கு பதிலாக இராணுவத்தினர் களமிறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

