28.9 C
Colombo
Saturday, October 10, 2026

விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் மடுவில் இருவர் கைது!

காணொளியாக பார்க்க….

https://fb.watch/q8tspwHBXQ/?mibextid=2JQ9oc

மன்னார் – மடு, பண்டிவிரிச்சான் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றி வளைப்பின் போது இன்று (10) இருவர் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா, மடுகந்தையில் உள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, காட்டுப் பகுதியில் 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் மடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles