ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவது தொடர்பாக அமைச்சரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னரான இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் குன்வர்தன, அவ்வாறான எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விடுத்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சாவை பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்திருந்தார்.
அந்த கருத்தை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல என்பதனால் இந்தக் கருத்துக்கு அவர் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

