28.9 C
Colombo
Friday, August 21, 2026

அனுரவின் இந்திய விஜயத்தை வரவேற்ற நாமல் ராஜபக்ஷ!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

அனுரவின் இந்திய விஜயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி. பல ஆண்டுகளாக இந்தியாவை விமர்சித்து வந்ததால் பல இந்திய முதலீடுகள் கைவிடப்பட்டன. தற்போது ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இருப்பினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு நிலைப்பாட்டை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது, இது ஒரு நல்ல விஷயம்,” என்று அவர் கூறினார்.

அவர்களின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கும் என்று தான் நம்புவதாக ராஜபக்ச கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி குழுவினர் ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளனர்.

தூதுக்குழுவினர் புது டெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்லவும், விவசாயம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மையங்களைப் பார்வையிடுவதோடு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles