24.5 C
Colombo
Thursday, October 8, 2026

சிறைச்சாலை வைத்தியசாலையில் அமைச்சர் கெஹலிய அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிசோதனையின் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெலவுக்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles