தேசிய தைப்பொங்கல் விழா இம்மாதம் 21ஆம் திகதி மலையகத்தின் ஹட்டனில் நடைபெறவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் தேசிய தைப்பொங்கல் விழா இம்மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஹட்டன், டன்பார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டிருப்பதால் இந்த ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

