31.7 C
Colombo
Sunday, October 11, 2026

14 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!

14 ஆவது தடவையாக யாழ்ப்பாண வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) முதல் 21ஆம் திகதி வரையில், யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூன்று தினங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும்.

யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்த்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டை சேவைகள் நிறுவனத்தினால் குறித்த வர்த்தக சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த ஆண்டும் 300 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்களை அமைத்துள்ளோம். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம்.

இந்த கண்காட்சி ஒரு களியாட்ட நிகழ்வாக இருக்காது. இது தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.

அதேவேளை மாவட்ட செயலர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும், தொழில் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும் இலவசமாக காட்சி கூடங்களை வழங்கியுள்ளோம்.

எமது பிரதேசத்திற்கு தேவையானவற்றை இந்த கண்காட்சி ஊடாக அறிமுகப்படுத்தி வருகின்றோம். இம்முறையும் தொழில் நுட்பங்கள், புதுப்பிக்கதக்க சக்திகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

குறித்த கண்காட்சிக்காக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் தங்கி நிற்க போகின்றனர். இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகள் , உணவக தொழில் துறை சார்ந்தோருக்கும் நன்மைகள் பயக்கும் என்பதுடன் யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாத் துறை சார்ந்த நன்மைகள் கிடைக்கும் – என்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles