ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
புத்தாண்டில் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (09) கூடிய போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
செயற்பாட்டு அரசியலையும் கைவிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார். “எனக்கு கட்சியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, நான் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

