29.5 C
Colombo
Saturday, October 10, 2026

இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் – காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 06 ஆம் திகதி நெடுந்தீவில் கைதான 14 மீனவர்களும் டிசம்பர் 13 ஆம் திகதி காரைநகர் கடற்பரப்பில் கைதான 06 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் அனைவரையும் டிசம்பர் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 20 இந்திய மீனவர்களும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles