28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் பல்கலைக்கு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் விஜயம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் தத்தா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள், இந்து கற்கைகள் பீட மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது துறைத் தலைவர், விரிவுரையாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளிலும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பங்கேற்றிருந்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles