25 C
Colombo
Saturday, October 10, 2026

யாழில் பணம் மற்றும் போதைப்பொருளுடன் பெண் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

37 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார்.

720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 23,000 ரூபா பணமும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டநிலையில் குறித்த நபரை நாளை(20) வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதித்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles