32.2 C
Colombo
Friday, October 9, 2026

வெளிநாட்டு தம்பதியை தாக்கி நகைகளை கொள்ளையிட்ட திருட்டு கும்பல்!

பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர் கொள்ளைக் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

கிருலப்பனையில் உணவகமொன்றுக்கு அருகில் குறித்த பெண்ணை தாக்கி, அவரது நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் அச்சமடைந்த அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதுடன், மின்னஞ்சல் மூலம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles