28.9 C
Colombo
Saturday, October 10, 2026

உலக தமிழர் பேரவைக்கு வலுக்கும் கண்டணம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஆறு புலம்பெயர் அமைப்புகள் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், அமெரிக்க யுனைட்டட் ஸ்டேட்டஸ், தமிழ் அக்சன் குரூப், உலகத்தமிழ் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தின் ஈடுபாடு அவசியம் என்ற அடிப்படையில் உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் பெளத்த மதகுருமார் சிலருடனும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் சிலருடனும் கலந்துரையாடியதை அறிந்துகொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களில் தெரிவுசெய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிலருடன் மாத்திரம், குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பு அவசியம் என குறித்த 6 தமிழ் அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.

மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் எனவும் அவை தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை அவசியம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles