28.9 C
Colombo
Friday, August 21, 2026

தமிழரசுக் கட்சி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் பேரினவாத செயல்பாடுகள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது

இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையிலேயே வவுனியா நகரில் வைத்து தமிழரசுக் கட்சியால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், இ.சாணக்கியன்,மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles