மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் போராட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு பெருமளவான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்றது.
…………………………………………………………….
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பில் போராட்டத்திற்கு சென்று திரும்பிய பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது!
Update | மட்டக்களப்பில் போராட்டத்திற்கு சென்று திரும்பிய பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது!

