28.9 C
Colombo
Friday, August 21, 2026

களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் – மேர்வினுக்கு விந்தன் சவால்

களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் – வந்து தலையை கொய்யுங்கள் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மேர்வின் சில்வாவுக்கு சவால் விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (16)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விந்தன் கனகரட்ணம் இந்த பகிரங்க சவாலை விடுத்தார்.

மேலும் தெரிவிக்கையில், உங்களுக்கு வன்முறை ஊறிப்போனது. எங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோதே நாம் வன்முறையை கையில் எடுத்தோம். உங்களுக்கு ஆலயங்கள் பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது இயல்பு.

களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் .வந்து தலையை கொய்யுங்கள். நீங்கள் வாளுடன் வரும் போது நாம் என்ன செய்வோம் என்பதை அப்போது பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் களனியில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்த நிலையில் பல தரப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles