29.5 C
Colombo
Friday, October 9, 2026

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக காணப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையேயான முரண்பாடு பிறப்பு பதிவை மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக அறியப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்கள் விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்படி கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles