நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கைலாசபதி கலையரங்கில் நேற்று(7) காலை ஆரம்பமானது.
“சமூகக் கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இடம் பெறும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடானது தொடர்சியாக இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் ஆரம்பமான ஆய்வு மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஆய்வு மாநாட்டில் கலை, கலாச்சார நிகழ்வுகள் , ஆய்வுரைகள் மற்றும் புலமையாளர் கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றன.
காணொளியாக பார்க்க…https://fb.watch/mhluzn5d8_/?mibextid=Nif5oz


