23.9 C
Colombo
Sunday, October 11, 2026

அபிவிருத்தியை செய்வோர் தமிழ்த்தேசிய துரோகிகள் அல்ல – அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

அபிவிருத்தி தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அபிவிருத்தியை செய்வோர் தமிழ்த்தேசிய துரோகிகளும் அல்ல என்றார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் ஏற்பாட்டில நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,மக்களை பசியோடும் கஸ்டத்தோடும் வைத்துக்கொண்டு தமிழ்தேசியம் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடியாது என்பதை எமக்காக உயிர்கொடுத்து போராடியவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் தேவையான நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி போராட்டத்தோடு இணைந்த அபிவிருத்தியையும் அவர்கள் செய்தார்கள்.ஆனால் 2009க்கு பின்னதான அரசியல் அதையனைத்தையும் மறந்துவிட்டது.

75 ஆண்டுகளுக்கு முன் எமது பெரியவர்கள் கேட்ட அதே கேள்விகள் 35 வருடங்களுக்கு முன் எமது சகோதர்கள் கேட்டார்கள். இன்றும் அதே கேள்விகளை இந்த மாணவர்கள் கேட்கிறார்கள். இதே கேள்விகளை அடுத்த 20 வருடங்களில் உங்கள் பிள்ளைகள் கேட்கும் நிலை வந்தால் அது உங்களின் தோல்வி எங்களின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும் – என்றார்.

குறித்த விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

விவாத நிகழ்ச்சியை முழுமையாக பார்வையிட…..https://fb.watch/mhmXV3aGzS/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles