வடமாகாண மாவட்டங்களில் இருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் திரவப் பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நிறுத்தி அந்த திரவப் பாலை வடக்கில் பால் தொடர்பான பொருட்களுக்கு பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் வடமாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் பலர் மாடு மற்றும் ஆடுகளை வைத்து அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், நாளாந்தம் கிடைக்கும் பாலில் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் அறிவை அவர்களுக்கு வழங்கினால், மேலும் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

