29.5 C
Colombo
Friday, October 9, 2026

வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக அ.பத்திநாதன் பொறுப்பேற்பு

வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஜூலை 10ம் திகதி சுற்றுலா பணியக அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக, பல்வேறு நிறுவனங்களில் பல உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பி்.எஸ்.எம்.சாள்ஸ் 2023-07-08ஆம் திகதி வழங்கிய கடிதம் மூலம் வழங்கப்பட்ட இந்த நியமனத்தில் 2023-07-10 முதல் 2024-06-30 வரை ஓராண்டுக்குச் செயல்படும் வகையில் இந்த நியமனம்  வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஏனைய புதிய உறுப்பினர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles