29.5 C
Colombo
Friday, August 21, 2026

பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் வசதிகளுக்காக புதிய முத்திரை வெளியீடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் நடவடிக்கைகளுக்கான 50 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரை வெளியீடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நூலகத்தில் நேற்று(06) இடம்பெற்றது.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரை வெளியிடப்பட்டதுடன் இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தபால்மா அதிபர் எம்.ஆர்.பி. சத்குமார உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles