ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என இலங்கையின் பிரதமர் வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்டப்பட்ட போதிலும், இன்றுவரை சில ஆணைக்குழுக்கள் முழுமையாக நியமிக்கப்படவில்லை எனவும், இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குன்வர்தன சுட்டிக்காட்டினார்.
“ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு வழங்கியதுடன், பதவி நீடிப்பு காலாவதியானது. பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான தனது முடிவை ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பார்,” எனவும் 48 மணித்தியாலங்களுக்குள் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் சேவையை பேணுவதற்கு தேவையான கடமைகளை மேற்கொள்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

