28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் வீட்டுக்குள் புகுந்து வன்முறை தொடர்பாக இதுவரை 58 பேர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28ம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேகநபர்கள் கைது செய்யபட்டனர்.

24 சந்தேகநபர்களையும் இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles