28.9 C
Colombo
Friday, August 21, 2026

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles