28.9 C
Colombo
Friday, August 21, 2026

நல்லூரில் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தலில் ஈகைச்சுடரினை மாவீரரின் தயார் ஒருவர் ஏற்றிவைத்தார்.

பின்னராக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles