இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் அன்னை பூபதியின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு பொது சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பொழுது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


