27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஹிஷாலினியின் தாயிடம் பல வாக்குறுதிகளை வழங்கினார் இராஜாங்க அமைச்சர்!

சிறுமி ஹிஷாலினியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதென்றபோதிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு முறையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இவ்வாறு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா இன்று (25) தெரிவித்தார்.

மர்மமாக மரணித்த சிறுமி ஹிஷாலினியின் தாய் மற்றும் உறவினர்களை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சிறுமியின் குடும்பத்தாருக்கு நிதி உதவியை வழங்கியதுடன், அவர்களது மகளின் மரணச் சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்பை தமது அமைச்சு வழங்கும் என்றும், அத்தோடு 3 மாதத்துக்குள் குடும்பத்திற்கான வீட்டை புனர்நிர்மாணம் செய்வதற்கும் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கும் தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles