இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்றிலில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் இது திட்டமிட்ட உருமறைப்பு என குறிப்பிட்டு இன்று பிற்பகல் அன்னாரின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள் மேற்படி விடயம் தொடர்பில் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா பங்குபற்றியிருந்தார். அவர்கூட இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


