28.4 C
Colombo
Friday, October 9, 2026

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – மேலும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை?

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது, பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.

அதன் போது, பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் வேலன்சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை மேலும் சிலரை கைது செய்வதற்கும்  பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles