24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடாத்த அழைப்பு!

ஜ.பி.எல் போட்டித் தொடரில் எஞ்சியதை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உதவ இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது என பிசிசிஐ யின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் T 20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டிகளை நடாத்த ஒரு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்து கொண்டிருந்த போது இந்த சலுகை வந்துள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் நடத்த நாங்கள் நிச்சயமாக மைதானத்தை வழங்க முடியும் என்று எஸ்.எல்.சியின் நிர்வாகக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா, கொழும்பிலிருந்து தொலைபேசியில் பிரத்தியேகமாகப் அழைத்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் லங்கா பிரீமியர் லீக்கை (எல்பிஎல்) நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் மைதானமும் பிற உள்கட்டமைப்புகளும் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல்-க்கு தயாராக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles