24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

வடக்கில் கொரோனாவின் தீவிரம் – மூன்று சிகிச்சை நிலையங்கள் தயார்!

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் மூன்று சிகிச்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2 ஆம் மற்றும் 3ஆம் விடுதிகள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மலையாளபுரம் பகுதியில் இராணுவத்தினரின் வைத்தியசாலையாக இயங்கிய இடம் கொரோன சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஒரு விடுதி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles