கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தன கடந்த வெள்ளி கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டமையினால் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் டலஸ்அழகப்பெருமவும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித்வீரதுங்கவும் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கொவிட் செயலணியின் கூட்டணியில் கலந்துகொண்டதால் செயலணி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பந்துல குணவர்த்தன அமைச்சர் டலஸ்அழகப்பெருமவையும்,இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணானண்டோபுள்ளேயையும் லலித்வீரதுங்கவையும் சந்தித்துள்ளார்.
அமைச்சர் டலஸ்அழகப்பெருமவும் லலித்வீரதுங்கவும் தேநீர் இடைவெளியின் போது தங்கள் முகக்கவசங்களை சிறிது அகற்றியதால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தேநீர் அருந்தவில்லை. முகக்கவசத்தை அகற்றவில்லை எனப்படுகிறது.
கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி பிரதமர் இராணுவத்தளபதி சுகாதார அமைச்சர் நிதியமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
பந்துல குணவர்த்தன சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும் டலஸ் அழகப்பெருமவிற்கும் அருகில் அமர்ந்திருந்தார்.

