27.8 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் நகரில் நகை கடை உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கூரை உடைக்கப்பட்டு நேற்றையதினம் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 40 இலட்சம் ரூபாய் பணமும் 30 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரால் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles