28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கொள்ளைக் கும்பல் தென்னிலங்கையில் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நாட்டின் பல பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து திருடி வந்த கும்பல் கம்பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, கலஹா, நுவரெலியா மற்றும் கந்தபொல ஆகிய பகுதிகளில் இந்த குழு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 19 தொடக்கம் 26 வயதுக்குட்பட்டோர் எனவும் யாழ்ப்பாண நீதிமன்ற எல்லைக்குள் மாத்திரம் இந்த குழுவினருக்கு 9 பிடியாணை உத்தரவுகள் உள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு வருடங்களாக நாட்டின் பல பகுதிகளில் வாடகைக்கு வீடுகளை எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles