கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளின் ஓய்வு நிலை அதிபர் பொ.கமலநாதன் இன்று(26) காலமானார்.
சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரான இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் (1996 – 2007) , யூனியன் கல்லூரியில் பலவருடங்கள் ஆசிரியராகவும் பின்னர் 1994 முதல் 1996 வரை அதிபராகவும் சேவை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

