24.5 C
Colombo
Thursday, October 8, 2026

மாங்குளத்தில் பேருந்து விபத்து – மூவர் பலி

காணொளியை பார்க்க…..

https://www.facebook.com/share/v/tztjkXHbzJ7Z3RoF/?mibextid=oFDknk

முல்லைத்தீவு மாங்குளத்தில் பேருந்து  விபத்துக்குள்ளானதில் நேற்று (25) இரவு மூவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருத்த பணியில் மூவர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பேருந்து மீது வீதியில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும் மேலும் இரு பயணிகளும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

பஸ்ஸின் சாரதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பயணிகள் இருவரின் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பஸ்ஸின் நடத்துநரும் மற்றுமொருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles