28.9 C
Colombo
Saturday, October 10, 2026

நல்லூர் விசேட பூஜை நேரங்களை தவிர்த்து அருகிலுள்ள கடைகளுக்கு செல்ல அனுமதி!

கொவிட் 19 சூழலில் நல்லூர் கந்தன் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் வீதித் தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அனுமதி வழங்கப்படுவதுடன் விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுமதி
வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நடைமுறையில் தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலீசாருடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles