யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன் கலந்து கொள்ளும் வாசிப்பும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி நாளை புதன்கிழமை (06) மாலை மூன்று மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் (Arts Seminar Hall) இடம்பெறும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வில் ஐயாத்துரை சாந்தன் தன்னுடைய இலக்கிய எழுத்துக்களில் இருந்து வாசிப்புக்களை மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறும்.
ஐயாத்துரை சாந்தன் இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகிய “சாகித்திய அக்கடமி” விருது பெற்றவர். அத்துடன் அவர் இலங்கையில் “சாகித்ய ரத்னா” பட்டம் பெற்றவர்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் சுமார் முப்பது இலக்கிய படைப்புக்களை உருவாக்கியுள்ளார். இவரது படைப்புகள் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளதோடு பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

